நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையில், பெரும்பாலான வடமநிலத்தவர்கள் வாழும் சவுக்கார்பேட்டில் வழக்கம் போல் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. காலை 6 மணி முதலே தொடங்கிய இந்த ஹோலி கொண்டாட்டங்களில், வடமாநிலத்தவர்கள் மட்டுமின்றி பலதரபினர்களும் கலந்துக்கொண்டு கலர் பொடிகளை தூவி கொண்டாடினர்.
கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தால் சென்னை சவுக்கார்பேட்டையில் வழகத்தை விட ஆட்கள் குறைவாகவே திரண்டு கொண்டாடினர். இதனால் அங்கு கலர் பொடி விற்பனையாளர்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்தாக தெரிவித்தனர். ஆனால் இன்று, அங்கு மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. அங்கு கொண்டாடுபவர்கள் மீது மட்டுமின்றி அவ்வழியே சென்று வருவோர் மீதெல்லம் கலர் பொடிகளை தூவி, ஹோலி வாழ்த்துகள் கூறி அன்பை பரிமாறிக்கொண்டனர். இவ்வாரு மகிழ்ச்சியும், வண்ணங்களும் நிறைந்த ஹோலி கொண்டாட்ததின் புகைப்பட தொகுப்பு பின்வருமாறு,





































