முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை பனையூர்: ரசிகர்களுடனான விஜய்யின் சந்திப்பு நிறைவு

வாரிசு படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் பரவும் நிலையில் சென்னை பனையூரில் நடிகர் விஜய் இன்று தனது ரசிகர்களை சந்தித்தார்.

விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் வாரிசு வெளியாக உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விஜய்க்கு தெலுங்கிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இதனால் வாரிசு படத்தை ஆந்திரா, தெலுங்கானாவிலும் கூடுதல் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். இதற்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் எதிப்பு தெரிவித்து உள்ளது. பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்களை வற்புறுத்தி உள்ளது.

இந்தநிலையில், சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் தனது ரசிகர்களை விஜய் சந்தித்தார். நாமக்கல், புதுக்கேட்டை, சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்து கொண்டார். 5 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் விஜய் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்தித்து அவர்களுடன்‌ புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். சேலம் , நாமக்கல் கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரத்தை சேர்ந்த மக்கள் மன்ற மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர், ஒன்றியம், நகரம் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார். மிக விரைவில் மற்ற மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.

மேலும், வாரிசு படம் வெளியீடு குறித்து தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். தேர்தல் தொடர்பான முடிவு குறித்து விஜய் உங்களிடம் சொல்வார். யார் எல்லாம் உண்மையாக மக்களுக்கு பணியாற்றுகிறார்களோ அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலில் சந்திக்கிறோம். ரசிகராக இருந்தாலும் அடிமட்ட தொண்டராக இருந்தாலும் அவர்களை சந்திப்பது தான் விஜய்யின் முதல் வேலை என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரதமர் நரேந்திரமோடிக்கு பவானி தேவி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்

Halley Karthik

இந்தியாவில் நாளொன்றுக்கு 77 பாலியல் வன்புணர்வுகள் – மத்திய அரசு

Halley Karthik

மு.க.ஸ்டாலின் தலைமையில் 100 நாட்கள்; அரசு மேற்கொண்ட திட்டங்கள்

G SaravanaKumar