செஸ் ஒலிம்பியாட்-சென்னை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான துவக்க விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு…

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான துவக்க விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

துவக்க விழாவிற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பார்க்கிங் வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்க விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.  மொத்தமாக 5000 மேலே பந்தோபாஸ்து ஏற்பாடு செய்யபட்டு உள்ளது.

போக்குவரத்து மாற்றம் குறித்து எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. அவ்வாறு இருந்தால் உடனடியாக செய்தி அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை கைது செய்யும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது அனைத்து  இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் வருகைக்காக 7 மடங்கு பாதுகாப்பு ஏற்படுத்தபட்டுள்ளது. மோடி வருகையின் போது, அவரது வருகைக்கு எதிராக பதிவிடும் சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் போராட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இன்று இரவு முதல் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக சென்னை முழுவதுமாக 22,000 போலிசார் குவிக்க பட உள்ளனர். ஹீலியம் பலூன், ட்ரோன்கள் பறக்க அனுமதி இல்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.