மெட்ரோ ரயில் பயண அட்டை செல்லுபடி காலம் நீட்டிப்பு

கொரோனா ஊரடங்கு காலத்தில் பயன்படுத்தப்படாத சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டைகளின் செல்லுபடி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டதால், மாதாந்திர பயண அட்டை பயனாளர்கள், அதனை பயன்படுத்திக்…

கொரோனா ஊரடங்கு காலத்தில் பயன்படுத்தப்படாத சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டைகளின் செல்லுபடி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டதால், மாதாந்திர பயண அட்டை பயனாளர்கள், அதனை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இருந்தது.

இதனிடையே, மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால், கடந்த மே 10 முதல் ஜூன் 20 வரை பயன்படுத்தப்படாத பயண அட்டைகளின் கால அளவு, அதற்கு சமமான காலத்துக்கு நீட்டிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயண எண்ணிக்கையின் அளவை நீட்டித்துக் கொள்ள, மெட்ரோ ரயில் நிறுவனங்களில் உள்ள வாடிக்கையாளர் சேவையை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.