சென்னை மெரினா கடற்கரை: விற்பனை மந்தம், வியாபாரிகள் வேதனை

சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகரித்த போதிலும், விற்பனை ஏதுமின்றி வியாபாரிகள் வாடிவருகின்றனர். மக்களின் பாதம், எப்போது படும் என்று ஏக்கத்துடன் காத்திருத்த மெரினாவிற்கும், சென்னைவாசிகளுக்கும் மகிழ்ச்சியை அளித்தது மாநகராட்சியின் அறிவிப்பு. ஊரடங்கு…

சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகரித்த போதிலும், விற்பனை ஏதுமின்றி வியாபாரிகள் வாடிவருகின்றனர்.

மக்களின் பாதம், எப்போது படும் என்று ஏக்கத்துடன் காத்திருத்த மெரினாவிற்கும், சென்னைவாசிகளுக்கும் மகிழ்ச்சியை அளித்தது மாநகராட்சியின் அறிவிப்பு. ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொதுமக்கள் மீண்டும் கடற்கரைக்கு செல்லலாம் என்பதே அந்த செய்தி.

பல ஆயிரம் பேரின் சந்தோஷத்தையும் தீர்மானிக்கும் இந்த மெரினா கடற்கரையை நம்பி பல நூறு வியாபாரிகள் இருக்கிறார்கள். மாநகராட்சியின் அறிவிப்பு தந்த மகிழ்ச்சி அவர்களுக்கு நீடிக்கவில்லை. என்ன என்கிறீர்களா? நீண்ட நாள் கழித்து பொது இடங்களுக்கு செல்லும் மக்கள், நோய் தொற்று பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள வெளியே உண்பதையும், கேளிக்கை திடல்களில் குழந்தைகள் ஒன்றாக விளையாடுவதையும் விரும்பாததே காரணம்.

அண்மைச் செய்தி: கட்டுமானங்கள் புராதன சின்னத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன? – சென்னை உயர்நீதிமன்றம்

இதனால், மெரினாவில் மக்கள் கூட்டம் அதிகரித்த போதிலும், சந்தோஷப்பட முடியவில்லை என்கின்றனர் மெரினா வியாபாரிகள். கடற்கரைக்கு வரும் மக்கள் கடைகளையும், கேளிக்கை திடல் உள்ளிட்டவற்றையும் வெறும் காட்சி பொருளாகவே பார்த்து செல்லும் நிலை மாற வேண்டும் என்பதே வியாபாரிகளின் விருப்பமாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.