முக்கியச் செய்திகள் விளையாட்டு

எனது இன்னொரு வீடாக சென்னையை கருதுகிறேன்-தோனி

எனது இன்னொரு வீடாக சென்னையைக் கருதுகிறேன் என்று இந்திய கிரிக்கெட்
அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25ம் ஆண்டு (வெள்ளி விழா) நிகழ்வு சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். சென்னை சூப்பர்
கிங்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளரும் , இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவருமான சீனிவாசன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் , சதுரங்கம் , கால்பந்து , தடகளம், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் தமிழகத்தை சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு தோனி விருதுகளை வழங்கினார் . பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
மாவட்ட கிரிக்கெட் சங்க கூட்டத்தில் நான் பங்கேற்பது இதுதான் முதன்முறை. சென்னையில் இருந்தபடி எனது ராஞ்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி
செலுத்துகிறேன். சென்னையை எனது இன்னொரு வீடாக கருதுகிறேன்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பள்ளி அளவிலான கிரிக்கெட் விளையாட்டிலிருதே நான் கிரிக்கெட்டை கற்றுக்
கொண்டேன். மாவட்ட அளவிலான போட்டிகள் மூலம் பல வீரர்கள் உருவாகியுள்ளளர். மாவட்ட அளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடினால் தேசிய அளவிலான போட்டியில் விளையாட வாயப்பு கிடைக்கும். திறமையான வீர்ர்களை உருவாக்குவதில் மாவட்ட கிரிக்கெட் அமைப்புகளுக்கு பொறுப்புகள் அதிகம். கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும். 25 வது விழாவை கொண்டாடும் இந்த சங்கம் , 50 ம் ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாட வேண்டும். ரஞ்சி, ஐபிஎல், இந்திய கிரிக்கெட் அணிக்கான வீரர்களை இந்த அமைப்பு உருவாக்க வேண்டும் என்று தோனி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அண்ணா நூலகத்தை சீரமைக்க நடவடிக்கை: அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

Halley Karthik

ஆதாரங்களுடன் புகார்கள் கிடைத்ததால் ரெய்டு நடக்கிறது-சட்டத் துறை அமைச்சர் ரகுபதி

Web Editor

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: கமல்ஹாசன்

EZHILARASAN D