பிரதமரை சந்தித்த குத்துச்சண்டை வீராங்கனைகள்

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளான நிக்கத் ஜரீன், மணிஷா மெளன், பர்வீன் ஹூடா ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உலக குத்துச்சண்டைப் போட்டி துருக்கியில் கடந்த மாதம்…

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளான நிக்கத் ஜரீன், மணிஷா மெளன், பர்வீன் ஹூடா ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

உலக குத்துச்சண்டைப் போட்டி துருக்கியில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில், இந்தியா சர்பில் 52 கிலோ பிரிவில் பங்கேற்ற நிக்கத் ஜரீன் தங்கப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம், 2018ல் தங்கப் பதக்கம் வென்ற மேரி கோமுக்குப் பிறகு முதல்முறையாக தங்கப் பதக்கம் வென்றவர் என்ற பெருமையை நிக்கத் ஜரீன் பெற்றார்.

இந்த போட்டியில் 57 கிலோ பிரிவில் பங்கேற்ற மணிஷாவும், 63 கிலோ பிரிவில் பங்கேற்ற பர்வீனும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

பதக்கம் வென்ற மூவரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதோடு, அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.