முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

திருமணத்தை தாண்டிய உறவு: பெண்ணுக்கு தீ வைத்து உடன் ஆணும் உயிரிழப்பு

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்த ஆண், தன் மீதும் உறவில் இருந்த அந்தப் பெண் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டதில் இருவருமே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரத்தைச் சேர்ந்தவர் சாந்தி (46). இவருக்கு திருமணமாக கணவர் உட்பட ஆண், பெண் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவரை பிரிந்த சாந்தி, 2014ஆம் ஆண்டு, திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் (வயது 53) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு ஐயப்பன் தாங்களில் வசித்து வந்துள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக சாந்தி அவரையும் பிரிந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதையடுத்து சாந்தி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கி ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது, வடபழனியில் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையை ஒப்பந்த அடிப்படையில் சுத்தம் செய்யக்கூடிய முத்து(48) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சாந்தி, தனது இரண்டாவது கணவர் ஶ்ரீராமை, கடந்த 6ஆம் தேதி சந்தித்துள்ளார். அதிலிருந்து அவர்கள் இருவரும் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள நடைமேடை 4இல் வசித்து வந்தனர்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் நடைமேடையில் சாந்தியும் ஶ்ரீராமும் பேசிக்கொண்டிருந்தனர். இதனை கண்ட முத்து கோபத்தில், அருகில் உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்று கேனில் பெட்ரோல் வாங்கி வந்து தனது உடலில் ஊற்றி கொண்டுள்ளார். ஸ்ரீராம் கழிப்பறைக்கு சென்றிருந்த நேரத்தில், சாந்தி மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவம் இடத்தில் இருந்து மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சைப் பலனின்றி, இன்று காலை 8 மணிக்கு அளவில் உயிரிழந்தனர். இதற்கிடையே, கழிப்பறைக்குச் சென்று வந்த ஸ்ரீராம்தான் சாந்தி பெட்ரோல் ஊற்றி எரித்ததாக நினைத்துக் கொண்ட பொதுமக்கள் அவரை நையப் புடைத்தனர். இதனால் அவரது முகத்தில் பெரும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து கோயம்பேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இ.பி.எஸ் முதலமைச்சராவதை யாராலும் தடுக்க முடியாது -எஸ்.பி.வேலுமணி

EZHILARASAN D

வந்தா பாப்போம்… சசிகலா குறித்து சூசகமாக பதில் சொன்ன ஓபிஎஸ்

EZHILARASAN D

‘4 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும்’

Arivazhagan Chinnasamy