தைவானைச் சேர்ந்த ஒருவருக்கு, அவர் ஏரியில் தொலைத்த ஆப்பிள் ஐபோன், ஒரு வருடத்திற்குப் பிறகு நன்றான செயல்பாட்டில் கிடைத்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அவர் ஃபோஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
கடந்த அரைநூற்றாண்டுகளாக தைவான் நாடு கடும் வறட்சியில் சிக்கி தவித்து வருகிறது. கடும் வறட்சியால் தைவானின் முக்கிய ஏரியான சன் மூன் ஏரி( Sun Moon Lake) வரண்டு விட்டது. தற்போது இந்த ஏரி குப்பை மேடாக மாறிவிட்டது. இந்த ஏரியில் தான் கடந்த ஆண்டு சென் என்பவர் படகு சவாரி செய்தார். அப்போது அவரது ஆப்பிள் ஐபோன் 11 புரோ மாக்ஸை ( Apple iPhone 11 Pro Max) தவறுதலாகத் தொலைத்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் தீவிரமாகத் தேடியுள்ளார். ஆனால் கைப்பேசி கிடைக்கவில்லை. கைப்பேசி கிடைக்கும் என்ற நம்பிக்கையே அவருக்குப் போய்விட்டது. இந்நிலையில் ஏரிக்கு அருகில் வேலை செய்து வந்த தொழிலாளி ஒருவர், சென் -னுக்கு தொலைப்பேசியில் அழைத்துள்ளார். மேலும் அவரது கைப்பேசி தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கைப்பேசியைப் பெற்றுக்கொண்ட சென்-னுக்கு, மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. மண்ணில் புதைந்துபோன, அந்த கைப்பேசி நன்றாகச் செயல்பட்டது. சென், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ளார். இந்தப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது.







