பி.ஏ. எல்.எல்.பி உள்ளிட்ட சட்டப்படிப்பில் சேர தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் இணையதளத்தில் வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்தள்ளது.
இதுகுறித்து திருச்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவித்ததாவது, இந்தாண்டுக்கான பி.ஏ. எல்.எல்.பி, பி.காம். எல்.எல்.பி., எல்.எல்.எம் சட்டப்படிப்புகளுக்கு வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் http://www.consortiumofnlus.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான பொது நுழைவுத்தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
விண்ணப்பிக்கும் மாணவர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கான உதவித்தொகை, மேலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித் தொகை பெற விரும்பினால் http://www.tnnlu.ac.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.