முக்கியச் செய்திகள் தமிழகம்

அனைத்து ரயில்களையும் இயக்கமுடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்த வழக்கில், பேருந்துகளை ஒப்பிடுகையில் ரயில்களின் கட்டணம் குறைவு என்பதால், அனைத்து ரயில்களையும் இயக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு நேற்று விசாரித்தது அதில், “ கடந்த வாரத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்துவருகிறது. தனிமனித விலகல் உள்ளிட்ட விதிகளை பின்பற்றினாலும், புறநகர் ரயில்களில் அவற்றை பின்பற்றுவதற்கான சாத்தியங்கள் குறைவு. இதன்காரணமாக ரயில்களை முழுமையாக இயக்க உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் நிபுணர்களை கலந்தாலோசித்து இதுசம்பந்தமாக முடிவெடுத்துக் கொள்ளலாம். தடுப்பூசி போடும் பணிகள் முழுமையடைந்த பிறகோ அல்லது தொற்று பரவல் குறைந்தாலோ மனுதாரர் இதே கோரிக்கையை மீண்டும் எழுப்பலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தனியார் கட்டுமான நிறுவனத்தில் 18.5கோடி ரூபாய் மோசடி!

Vandhana

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 48000 கனஅடியாக அதிகரிப்பு

Arivazhagan Chinnasamy

தமிழக சுகாதாரத்துறையுடன் கைகோர்க்கும் யுனிசெஃப்

G SaravanaKumar