முக்கியச் செய்திகள் சினிமா

தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து கோபாலபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ் ஜிப் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் திரையரங்குகளில்100% இருக்கைகளுக்கு எப்படி அனுமதி வழங்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 100 சதவீத இருக்கைகளுக்கு தற்போது அனுமதி வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதிக்கப்படுகிற தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து வரும் வரை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கோடு, இந்த வழக்கையும் சேர்த்து மதுரை கிளையில் விசாரிக்கபடும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனிடையே பொங்கலுக்கு சிம்புவின் ஈஸ்வரன், மற்றும் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகவிருந்தது. இதில் 50% பார்வையாளர்களுடனாவது ஈஸ்வரன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் திரைப்படம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அஸ்வினுக்கு நன்றி தெரிவித்த மோகன் லால்!

EZHILARASAN D

மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

Web Editor

ஸ்டாலினால் கனவுதான் காணமுடியும்:முதல்வர்

எல்.ரேணுகாதேவி

Leave a Reply