மீண்டும் மஞ்சள் நிறத்தில் காட்சியளித்த கொசஸ்தலை ஆறு!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் மிதக்கும் மஞ்சள் நிற கழிவு நீரால், மீன்கள் மற்றும் இறால்களின் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.  சென்னை எண்ணூர் பகுதியில் இருக்கும் கொற்றலை…

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் மிதக்கும் மஞ்சள் நிற கழிவு நீரால், மீன்கள் மற்றும் இறால்களின் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என
மீனவர்கள் கவலையடைந்துள்ளனர். 

சென்னை எண்ணூர் பகுதியில் இருக்கும் கொற்றலை எனப்படும் கொசஸ்தலை ஆற்றினை நம்பி தான் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் சுமார் 15க்கும் மேற்பட்ட மீனவ
கிராமத்தினர் தொழிலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொற்றலை ஆற்றில் மஞ்சள் நிறத்தில் கழிவு நீர் கலந்ததால் மீனவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஆற்றில் மஞ்சள் நிறத்தில் கழிவு நீர் கலந்து
வருகிறது. இந்த கழிவு நீர் இப்படியே கலந்து கொண்டிருந்தால் மீன்கள் மற்றும் இறால்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

மேலும் அருகாமையில் அமைந்திருக்க கூடிய தொழிற்சாலைகளில் இருந்து இதுவெளியேறி வருகிறதா? என்றும் உடனடியாக மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.