சென்னையில் 3 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் உள்ளது எனவும் கொரோனா தடுப்பூசி மற்றும் ஊரடங்கு குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தொலைத் தொடர்பு மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை பயன்பாட்டை தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “கொரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 100 தொலைபேசி இணைப்புகளைக் கொண்ட கட்டுப்பாட்டு மையம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கொரோனா குறித்த சந்தேகங்களை 044-46122300 044-25384520 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.
வீட்டு தனிமையில் உள்ளவர்களை தினமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கி கண்காணிக்கப்பார்கள்.

சென்னையில் தினமும் 25,000 பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளோம். மொத்தம் 12,600 படுக்கைகள் கொரோனா மய்யங்களில் தயார் நிலையில் உள்ளது அதில் இதுவரை 1,104 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளது என்றார். சென்னையில் 3 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. 13 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்திவிட்டோம் ஜூலை மாத இறுதிக்குள் 45 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி முழுமையாக செலுத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
கட்டுப்பாடு பகுதிகளாக சென்னையில் மூன்று பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட 475 தெருக்கள் உள்ளது.ஆறு நபருக்கு மேல் பாதிக்கப்பட்ட 363 தெருக்கல் உள்ளது.பத்து நபருக்கு மேல் பாதிக்கப்பட்ட 108 தெருக்கள் உள்ளது.
நடிகர் விவேக்கின் இழப்பு துரதிருஷ்டவசமானது.கொரோனா தடுப்பூசி குறிதது அவதூறு பரப்பமால் இருப்பதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. தடுப்பூசி கிடைக்காமல் பல நாடுகள் உள்ள நிலையில் தடுப்பூசி குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது கிரிமினல் குற்றம் என்றும் அவர் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும்.







