இனி கூகுள் மேப்ஸில் கொரோனா தடுப்பூசி மையங்களைக் கண்டறியலாம்!

கூகுள் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி மையம் இருப்பிடத்தை இனி கூகுள் மேப்ஸில் கண்டறியலாம் என தெரிவித்துள்ளது. கொரோனாவால் அதிக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு 2,50,000 கொரோனா தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாகவும் கூகுள் நிறுவனம்…

கூகுள் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி மையம் இருப்பிடத்தை இனி கூகுள் மேப்ஸில் கண்டறியலாம் என தெரிவித்துள்ளது.

கொரோனாவால் அதிக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு 2,50,000 கொரோனா தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சிலி, இந்தியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் மையத்தை கூகுள் மேப்ஸில் கண்டறிய வழிவகை செய்யப்படும் என்றும் மக்கள் எளிதாக தடுப்பூசி மையங்களை கண்டுப்பிடிக்க விளம்பரங்களை வெளியிடுவதாகவும் கூகுள் நிறுவன தலைமை சுகாதார அதிகாரி கரேன் டிசால்வோ தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சர்வதேச அளவில் தொற்றுநோயைக் கடக்க உலக அளவில் ஒருங்கிணைந்த முயற்சியில் கொரோனா தடுப்பூசி தேவைப்படும் நாடுகளுக்கு 250,000 கொரோனா தடுப்பூசிகளை வழங்கு நாங்கள் முன்வந்துள்ளோம் எனவும் கூறினார். இது தவிர, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு செய்ய 28 முக்கிய மொழிகளும் தவிர சில கிளை மொழிகள் மூலம், தொலைபேசி வாயிலாகவும் அல்லது மெசேஜ் வழியாகவும் பதிவு செய்துக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்,

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ள நிலையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசியை செலுத்தும் பணி நாடு முழுவதும் தொடங்கியிருந்தாலும், தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மேலும் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் உருவாக்கிய கோவாக்சின் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்சியாக ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-v இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட மூன்றாவது தடுப்பூசி ஆகும். ஸ்பூட்னிக்-v தடுப்பூசி இந்த மாதம் இந்தியாவுக்கு வழங்கப்படும். மேலும் சர்வதேச அளவில் இதுவரை 30,10,465 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.