பிரதமருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!

தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொற்று பாதிப்பில் 4வது…

தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொற்று பாதிப்பில் 4வது இடத்தில் உள்ள தமிழகத்தில், பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மாநிலம் முழுவதும் நேற்றய நிலவரப்படி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 9,344 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பானது, 9,80,728 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 9,02,022 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நேற்று 5,263 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 65,635 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 99,050 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 2,07,39,160 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று பாதிப்பின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பானது 13,071 ஆக அதிகரித்துள்ளது

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், உலகளாவிய தொற்று நோயிலிருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற தற்போது இருக்கக் கூடிய ஒரே சிறந்த கருவி தடுப்பூசி எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது என்றும், உண்மையில் தடுப்பூசிக்காக அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும் மக்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

நேரடி கொள்முதல் செய்வதற்காக மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி, மாநில பேரிடர் மேலாண்மை அதிகார சபையை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
யுனிவர்சல் தடுப்பூசிக்கு ஒரு கொள்கை முடிவை விரைவாக எடுக்கவும், கொரோனா பேரழிவில் இருந்து மக்களின் மொத்த பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்குமாறு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.