சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், டெங்கு தடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
இதற்கிடையே, அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்த நிலையில், தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வரும் ராதாகிருஷ்ணின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் பணிக்கு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.







