கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு; 15க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து நிறுத்தம்…

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, 15க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக விடியவிடிய கனமழை…

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, 15க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக விடியவிடிய கனமழை பெய்துவருகிறது. கன மழையால் நீர்நிலைகள் மற்றும் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

மாவட்டத்தில் அதிகப்பட்சமாக, களியல் பகுதியில் 70.6 மில்லி மீட்டரும், மாவட்டம் முழுவதும் 41.64 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில், மோதிரமலை – குற்றியாறு தரைப்பாலம் மூழ்கியதால், குற்றியாறு, மங்கா மலை என 15க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு செல்லும் பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பழங்குடி மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.