அக்டோபர் 6ம் தேதி தமிழ்நாட்டில் வெளியாக உள்ள திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அவற்றை குறித்து தெரிந்து கொள்வோம்
வருகிற அக்டோபர் 6ம் தேதி தமிழ்நாட்டில் வெளியாக உள்ள 10 திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளன. அவை என்னென்ன படங்கள் யார் யார் நடிக்கிறார்கள் விரிவாக அலசுவோம் வாருங்கள்.
முத்தையா முரளிதரனின் 800
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி சாதனை புரிந்ததால் அவரின் வாழ்க்கை வரலாறு ‘800’ என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. 800 படத்தின் நாயகனாக ஆஸ்கர் விருது பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் நடித்த மதூர் மிட்டல் தேர்வு செய்யப்பட்டார். மேலும், இப்படத்தில் மஹிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராம மூர்த்தி, ரித்விகா, அருள்தாஸ், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரத்தம்
இயக்குநர் சிஎஸ் அமுதன். அவர் இயக்கியுள்ள புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இப்படத்திற்கு ரத்தம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகிய 3 நாயகிகள் நடித்துள்ளனர். கண்ணன் நாராயணன் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதோடு கடந்தாண்டு வெளியான ‘ரத்தம்’ பட டீசரில் சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், வெங்கட்பிரபு ஆகியோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மார்கழித் திங்கள்
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஷாட் பூத் த்ரீ
இயக்குநர் அருணாச்சலம் வைத்தியநாதன் எழுதி இயக்கியிருக்கும் ‘ஷாட் பூட் த்ரீ’ என்ற படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு, சினேகா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விரைவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இதேபோல தில்லு இருந்தா போராடு, என் இனிய தனிமையே.., எனக்கு END-யே கிடையாது, இறுகப்பற்று, இந்த கிரைம் தப்பில்ல , தீ ரோடு உள்ளிட்ட 10 படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது.