சென்னை: சாகித்ய அகாதெமியில் புத்தக் கண்காட்சி தொடக்கம்!

சென்னை, தேனாம்பேட்டையில் குணா வளாகத்தில் உள்ள சாகித்ய அகாதெமியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.  தேசிய புத்தக வாரத்தை முன்னிட்டு சென்னை சாகித்ய அகாதெமியில் நவம்பர் 14 ஆம் தேதி முதல் நவம்பர் 20…

சென்னை, தேனாம்பேட்டையில் குணா வளாகத்தில் உள்ள சாகித்ய அகாதெமியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 

தேசிய புத்தக வாரத்தை முன்னிட்டு சென்னை சாகித்ய அகாதெமியில் நவம்பர் 14 ஆம் தேதி முதல் நவம்பர் 20 ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியை எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

விடுமுறை நாட்கள் உள்பட தினமும் காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் என பல்வேறு நூல்கள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள்:கலப்பட உணவு விற்றால் குறைந்தது 6 மாத சிறை; ரூ.25,000 அபராதம் – நாடாளுமன்ற நிலைக் குழு அறிவிப்பு!

இந்த புத்தகங்கள் 20 முதல் 50 சதவீதம் தள்ளுபடி விலையில் வழங்கப்படும். மேலும், புத்தகக் குழுவில் இணைந்து வாங்கும் புத்தகங்களுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.