தங்க மாத்திரைகளை வயிற்றுக்குள் வைத்து கடத்திவந்தவர் கைது!

துபாயிலிருந்து 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க மாத்திரைகளை வயிற்றுக்குள் விழுங்கி கடத்தி வந்த பயணி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று இரவு சென்னை…

துபாயிலிருந்து 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க மாத்திரைகளை வயிற்றுக்குள் விழுங்கி கடத்தி வந்த பயணி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில், வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறையினர் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ரியாஸ் என்ற பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தடுத்து நிறுத்தி விமானநிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்று எக்ஸ்ரே எடுத்து சோதித்துப் பார்த்தனர். அதில், அவருடைய வயிற்றுக்குள் கேப்சூல் வடிவிலான தங்க மாத்திரைகளை விழுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, முகமது ரியாசை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வந்து இனிமா கொடுத்து தங்க மாத்திரைகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 34 கேப்சூல் மாத்திரைகளில் 281 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு 13 லட்சம் ரூபாயாகும். இது தவிர அவரிடம் இருந்து ஐபோன்கள், டிஜிட்டல் வாட்ச்கள், பழைய லேப்டாப்கள் உள்ளிட்ட 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.