தமிழகத்தின் தலை சிறந்த தொகுதியாக ராஜபாளையம் தொகுதி மாற்றிக் காட்டப்படும் என அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.டி ராஜேந்திர பாலாஜி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ராஜபாளையம் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பால்வளத் துறை அமைச்சர் கே.டி ராஜேந்திரபாலாஜி, அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் வைப்பாறு, குண்டாறு, அழகர் அணை திட்டத்தை நிறைவேற்ற உள்ளதாக உறுதி கூறினார்.
கடலில் கலந்து வீணாகும் தாமிரபரணி ஆற்று நீரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ராஜபாளையத்தை தமிழகத்தின் தலை சிறந்த தொகுதியாக மாற்றிக் காட்ட உள்ளதாகவும் உறுதி படத் தெரிவித்தார். ராஜபாளையத்தில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்படும் எனக்கூறிய அவர், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெறுவது உறுதி என்றும் ராஜேந்திர பாலாஜி கூறினார்.







