முக்கியச் செய்திகள் கொரோனா

சென்னை; 2000 இடங்களில் கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்!

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 2000 இடங்களில் கோவிட்மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாக நடத்தப்படுகிறது. 12.09.2021 முதல் கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 33 கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற 33 மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 41,26,183 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தடுப்பூசி செலுத்தத் தகுதியுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் 55,46,797 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 48,13,470 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், 15 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களில் 226,495 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,79,909 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும், 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 1,29,051 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 86,812 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி 5,08,124 நபர்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை 34வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் என 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக ஒரு வார்டிற்கு 5 சுகாதாரக் குழுக்கள் வீதம் 200 வார்டுகளுக்கு 1,000 சுகாதாரக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில் மாநகராட்சி, காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் தென்னக இரயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஈடுபட உள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் 84,810 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 2,56,270 கோவேக்சின் தடுப்பூசிகள் மற்றும் 72900 கார்பெவேக்ஸ் தடுப்பூசிகள் என மொத்தம் 4,13,980 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்தி: ‘‘கணவன் மற்றும் மாமியார் உடன் பெண்களுக்குப் பிரச்சனை என்றால் பெண்கள் சேவை மையத்தை அணுகித் தீர்வு காணலாம்’ – அமைச்சர் கீதா ஜீவன்

முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், இணை நோயுடைய நபர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது, 75 நாட்களுக்கு அதாவது வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்தத் தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதன் மூலம் கோவிட் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியினை 2 தவணைகள் செலுத்திக் கொண்டு 6 மாதங்கள் (அ) 26 வாரங்கள் கடந்த நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தத் தகுதியுடையவர்கள். இவர்களுக்கு கார்பெவேக்ஸ் தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை 43,05,346 நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தத் தகுதியுடைய நபர்களாக உள்ளனர். இவர்களில் 5,08,124 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மட்டுமே 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நலமையங்களில் இலவசமாகச் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலங்கை அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!

Vandhana

இடைத்தேர்தல்: 4 தொகுதிகளில் பாஜக அபார வெற்றி

G SaravanaKumar

கட்டணம் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ்; தலைமை ஆசிரியர் மீது பெற்றோர் புகார்

G SaravanaKumar