வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2021-ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு பெஞ்சமின் லிஸ்ட், டேவிட் மெக்மில்லன் ஆகிய இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 1901-ம் ஆண்டு முதல் இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய ஐந்து துறைகளின் சாதனையாளர்களுக்கு…

2021-ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு பெஞ்சமின் லிஸ்ட், டேவிட் மெக்மில்லன் ஆகிய இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

1901-ம் ஆண்டு முதல் இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய ஐந்து துறைகளின் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 2021-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்.4 முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு டேவிட் ஜுலியஸ் (David Julius) மற்றும் ஆர்டம் படாபெளடியன் (Ardem Patapoutian) ஆகியோருக்கு வெப்பம், குளிர் மற்றும் தொடுதல் உணர்ச்சி எவ்வாறு நம் உடலின் நரம்பு மண்டலத்தில் உணர்ச்சித் தூண்டலை ஏற்படுத்துகிறது என்பது குறித்து விரிவான ஆய்வுக்கு வழங்கப்பட்டது.

நேற்றைய தினத்தில் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஸ்க்யூரா மனாபே, கிளாஸ் ஹசில்மேன், ஜியார்ஜி பாரிஸி ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வேதியலுக்கான நோபல் பரிசு ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் மெக்மில்லன் ஆகிய இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை வேதியியலில் இரண்டு வகை கேட்டலிஸ்ட் (Catalysts) மெட்டல் ( metal), என்சையிம் ( enzymes) மட்டுமே இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் தற்போது முன்றாவது வகை கேட்டலிஸ்ட் இருக்கிறது என்றும் இதற்கு ஏசிமெண்ட்ரிக் ஆர்கனோகேட்டலைஸிஸ் (asymmetric organocatalysis) என்றும் பெயர் சூட்டியுள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.