திருச்செந்தூர் கோயில் வசதிகள் மேம்படுத்தப்படும்; அமைச்சர்

திருப்பதி கோயிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வடபழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்த அமைச்சர் சேகர்பாபு, அங்கு நடைபெற்று வரும்…

திருப்பதி கோயிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்த அமைச்சர் சேகர்பாபு, அங்கு நடைபெற்று வரும் குடமுழுக்கு பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவம்பர் மாத இறுதிக்குள் வடபழனி முருகன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என கூறினார். 40 கோடி ரூபாய் செலவில் வடபழனி கோயில் அர்ச்சகர்களுக்கு வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கவிருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வடபழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கூடுதல் திருமண மண்டபங்கள், மொட்டை அடிக்கும் இடங்களில் கூடுதல் வசதி ஏற்படுத்தி தருதல் போன்ற பணிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். மேலும், பக்தர்கள் அதிகமாக வரும் 553 கோயில்களை மேம்படுத்துவதற்கு வரைவு திட்டம் தயாரிக்க அறிவுறுத்தியுள்ளதாகவும், திருப்பதி கோயிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.