காலநிலை மாற்றம் குறித்து ChatGPT-ன் ”ஷேக்ஸ்பியர் கவிதை” ! வைரலான ட்வீட்

ஷேக்ஸ்பியர் மொழியில் காலநிலை மாற்றத்தை விளக்குமாறு ட்விட்டர் பயனர் ஒருவர் ChatGPT-யிடம் கேட்க, அதற்கு கவிதை வடிவில் அவருக்கு கிடைத்த பதில் தற்போது வைரலாகி பலரின் கவனத்தை பெற்று வருகிறது. டெக்னாலஜி உலகில் தற்போது…

ஷேக்ஸ்பியர் மொழியில் காலநிலை மாற்றத்தை விளக்குமாறு ட்விட்டர் பயனர் ஒருவர் ChatGPT-யிடம் கேட்க, அதற்கு கவிதை வடிவில் அவருக்கு கிடைத்த பதில் தற்போது வைரலாகி பலரின் கவனத்தை பெற்று வருகிறது.

டெக்னாலஜி உலகில் தற்போது மக்கள் அதிகம் பேசுவது OpenAI நிறுவனத்தின் ChatGPT AI கருவியை பற்றி தான். இந்த கருவி செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயலியாகும். இது நாம் கேட்கும் கேள்விகளுக்கு மனிதர்களை போலவே பதில் அளிப்பதோடு, மனிதர்களை
போலவே சிந்திக்கும் திறனையும் பெற்றுள்ளது. Microsoft நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கி வரும் இந்த OpenAi நிறுவனத்தின் ChatGPT கருவி தற்போது உலக அளவில் மிகவும் பிரபலமாகி வருகிறது. ஒருபக்கம் செயற்கை நுண்ணறிவால் பலர் வேலை இழக்கும்
அபாயம் உள்ளதாக அஞ்சப்படும் அதே சூழலில் நாளுக்கு நாள் செயற்கை நுண்ணறிவுகளின் வளர்ச்சி வேகமடைந்து வருகிறது.

இந்நிலையில், GPT-4 என்ற ChatGPT-ன் புதிய அப்டேட்-ஐ சமீபத்தில் அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதன் சிறப்பே மல்டிமாடலிட்டி, உரை, படங்கள் மற்றும் ஒலிகள் போன்ற பல முறைகளில் கேள்விகளை புரிந்து கொண்டு செயல்படும் திறன் தான். உதாரணமாக ஒரு குளிர்சாதனப் பெட்டியின் உட்புறத்தைப் படம் எடுத்து அனுப்பினால், அது என்ன படம் என்பதைச் சரியாக அடையாளம் காண்பதோடு மட்டும் அல்லாமல், உள்ளிருக்கும் பொருள்களைக் கொண்டு என்ன சமைக்கலாம் என்பது வரை ChatGPT-யால் சொல்ல முடியும்.

இது ஒருபுறம் இருக்க உலகம் முழுவதும் உள்ள ChatGPT பயனர்கள், இந்த கருவியின் செயல்திறனை அவ்வப்போது சோதித்து வருவதோடு, அதில் கிடைக்கும் சுவாரஸ்யமான பதில்களை தங்களது சமூகவலைதளபக்கங்களில் பதிவிட்டும் வருகின்றனர், அந்த வகையில் சமீபத்தில் டான் மில்லர் என்கிற நபர் ChatGPT-யிடம் ஷேக்ஸ்பியர் மொழியில் காலநிலை மாற்றத்தை விளக்குமாறு கேட்டுள்ளார்.

https://twitter.com/danmiller999/status/1636271734335868928?s=20

அதற்கு ஷேக்ஸ்பியர் வடிவிலான கவிதை ஒன்றை ChatGPT பதிலாக கொடுத்துள்ளது. அதில் “Prithee, attend, thou gentle souls and wise. To hear a tale of warming in our skies. A change that doth the very earth beset. And causeth all in sundry ways to fret,” என எழுதப்பட்டிருந்தது. இதன் பொருள் “பிரிதீ, மென்மையான உள்ளங்களும் ஞானிகளும், எங்கள் வானத்தில் வெப்பமயமாதல் பற்றிய ஒரு கதையைக் கேட்க, பூமியையே சூழ்ந்து கொள்ளும் ஒரு மாற்றம், மற்றும் பல்வேறு வழிகளில் அனைவரையும் கவலையடையச் செய்கிறது.” என்பதே பொருள். 28 வரிகள் கொண்ட இந்த சுவாரஸ்யமான கவிதையை தனது ட்விட்டர் பக்கத்தில் டான் மில்லர் பகிர்ந்த சில மணி நேரங்களிலேயே வைரல் ஆனதோடு, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

https://twitter.com/danmiller999/status/1636760076089425920?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.