இணையத்தில் வைரலாகும் விராட் கோலி நடன வீடியோ!

கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் விராட் கோலி நார்வே நாட்டு நடனக் குழுவான குயிக் ஸ்டைலுடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியதை அடுத்து, ரசிகர்கள் சிலர் வீடியோவில் ஒரு சுவாரஸ்யமான எடிடிங்கை செய்து வெளியிட்டுள்ளனர்.…

கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் விராட் கோலி நார்வே நாட்டு நடனக் குழுவான குயிக் ஸ்டைலுடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியதை அடுத்து, ரசிகர்கள் சிலர் வீடியோவில் ஒரு சுவாரஸ்யமான எடிடிங்கை செய்து வெளியிட்டுள்ளனர்.

இந்த எடிட் வீடியில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா போன்ற இந்திய நட்சத்திரங்கள் மற்றும் மீண்டு வரும் ரிஷப் பந்தின் முகங்கள் கூட இந்த நடன காணொளியில் இடம்பெற்றுள்ளது.

நார்வேயின் நடனக் குழு, குயிக் ஸ்டைல் ​​அற்புதமான ஒத்திசைவாக்கப்பட்ட நடன அசைவுகளுக்குப் பிரபலமானது. இந்த குழு கடந்த ஆண்டு இந்திய பாடலான ‘கலா சாஷ்மா’ நடன வீடியோக்கள் மூலம் உலகம் முழுவதும் வைரலானது.

இந்நிலையில், கோலி நார்வே நாட்டு நடனக் குழுவான குயிக் ஸ்டைலுடன் நடனமாடும் வீடியோவை ரசிகர்கள் சிலர் எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடீயோவை காண இங்கே க்ளிக் செய்யவும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.