முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

ஆஸி. வீரர்கள் நாடு திரும்ப தனி விமானம் – கிரிக்கெட் சங்கம் பரிசீலனை!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்புவதற்காக தனி விமானம் ஏற்பாடு செய்வது பரிசீலனையில் இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் டோட் கிரீன்பெர்க் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், இந்தியாவுடனான நேரடி விமான சேவைக்கு மே 15- ஆம் தேதி வரை, ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் இந்தியாவில் ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்புவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானத்தை அனுமதிக்க வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வாய்ப்பில்லை என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்திருந்தார்.

ஐபிஎல் வீரர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் கவனித்துக்கொள்ளும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதற்கிடையே, வீரர்கள் நாடு திரும்புவதற்காக தனி விமானத்தை ஏற்பாடு செய்வது பரிசீலனையில் இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் டோட் கிரீன்பெர்க் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் ஆனாலும் இது எளிதானதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:

Related posts

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 6-ம் கட்ட வாக்குப்பதிவு!

Sathis

சீனாவை தாக்கிய மணல் புயல்!

Saravana Kumar

குப்பை கையாளும் பணியாளர்களுக்கு PPE கிட் வழங்கப்படும் : சுகாதாரத்துறை செயலாளர்

Ezhilarasan