புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்லும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரியில் மே 2-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்லும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது, இதன் தொடர்ச்சியாக நேற்று புதுச்சேரியில் நான்கு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, ஆயிரத்து 546 நபர்களுக்கு Rapid Antigen Test முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் 84 முகவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்து 481 பேருக்கு RTPCR முறையில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதால், முடிவுகள் இன்று தெரியவரும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.