பட்டய கிளப்பும் மஞ்சும்மல் பாய்ஸ் | வசூல் அப்டேட்!

மஞ்சும்மல் பாய்ஸ் படம் ரிலீஸாகி இதுவரை ரூ.130 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. மலையாளத்தில் இயக்குநர் சிதம்பரம் எஸ் பொடுவல் இயக்கத்தில், கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான…

நண்பர் குழு ஒன்று கொடைக்கானலுக்கு செல்கிறது. அதில் ஒருவர் குணா குகையில் விழுந்து விடுகிறார். அவனை நண்பர்கள் குழு எப்படி மீட்டது என்பதே படத்தின் கதை. இந்தப்படத்தில் குணா படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு பாடல் இடம் பெற்று இருந்தது தமிழ் ரசிகர்களிடம் பயங்கரமாக கனெக்ட் ஆகி விட்டது. இதனால் இப்போதும் தமிழில் மஞ்சும்மல் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்தப்படத்தின் தற்போதைய வசூல் தொடர்பான விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

 

இந்தப்படம் வெளியான அன்றைய தினம் 3.3 கோடி ரூபாய் வசூல் செய்தது. முதல் நாள் படம் பார்த்தவர்கள் படத்தைப் பற்றி பாசிட்டிவாக கருத்துக்களை பகிர, அதனைதொடர்ந்து படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்குள் வர ஆரம்பித்தனர்.

 

இதனால் முதல் வார இறுதியில் இந்த திரைப்படம் 28. 35 கோடி ரூபாய் வசூல் செய்தது. இரண்டாவது வார முடிவில் 37.15 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த நிலையில் படம் வெளியாகி 17 நாட்கள் கழிந்த நிலையில், இந்தப்படம் தற்போது இந்தியாவில் மட்டும் 77.40 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. 20 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப்படம் உலக அளவில் இந்தப்படம் 130  கோடியை தாண்டி வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.