“ஜாபர் சாதிக் வழக்கில் திமுகவை தொடர்பு படுத்துபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடருவோம்” – திமுக எம்.பி. வில்சன்

“ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக ஆதாரம் இல்லாமல் திமுகவை குற்றம் சாட்டுபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடருவோம்” -என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார்.   டெல்லியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில்…

“ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக ஆதாரம் இல்லாமல் திமுகவை குற்றம் சாட்டுபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடருவோம்” -என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார்.  

டெல்லியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார்.

அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அரசியலில் முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வாக்கு மூலம் கொடுத்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசை அதிமுக, பாஜக கட்சிகள் மாறி மாறி விமர்சித்து வருகின்றன. தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாகி விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. வில்சன்,  “ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக ஆதாரம் இல்லாமல் திமுகவை குற்றம் சாட்டுபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடருவோம்” -என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.