ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்!

விருதுநகர் மாவட்டம் , ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் அமாவாசை அன்று…

விருதுநகர் மாவட்டம் , ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசித்தி பெற்ற பெரிய
மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் அமாவாசை அன்று பூக்குழிதிருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு பூக்குழி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது . இதில், சுமார் 15 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி பிரார்த்தனை செலுத்தினர்.

மேலும், பூக்குழி திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு திருமஞ்சனம் பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, பெரிய மாரியம்மன் திருத்தேரில் எழுந்தருள தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

இத்திருத்தேர் கோயிலை சுற்றியுள்ள வீதிகள் வழியாக வலம் வந்து பின்னர் நிலையை வந்தடைந்தது. மேலும், இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.