எதிர்க்கட்சி துணைத் தலைவர் மாற்றம்; சபாநாயகர் அப்பாவு பதில்

எதிர்க்கட்சி துணைத் தலைவர் மாற்றம், இருக்கைகள் ஒதுக்குவது உள்ளிட்ட விவகாரத்தில் சட்டமன்றத்தின் மாண்பு குறையாமல் முடிவு எடுக்கப்படும் எனச் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விழிப்புணர்வு செஸ்…

எதிர்க்கட்சி துணைத் தலைவர் மாற்றம், இருக்கைகள் ஒதுக்குவது உள்ளிட்ட விவகாரத்தில் சட்டமன்றத்தின் மாண்பு குறையாமல் முடிவு எடுக்கப்படும் எனச் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விழிப்புணர்வு செஸ் போட்டி தொடக்கவிழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா வேலுமணி கொடுத்த கடிதத்தை இதுவரை நேரில் பார்க்கவில்லை எனவும், சென்னை சென்று கடிதத்தைப் பார்த்துவிட்டு முடிவு எடுக்க இருப்பதாகத் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘இந்திய பாஸ்போர்ட்டுக்கு என்ன மதிப்பு தெரியுமா?’

நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான தீர்ப்பு வந்தது குறித்து பதில் அளித்த அவர், நீதிமன்றம் வேறு தேர்தல் ஆணையம் வேறு அதற்கும் சட்டமன்றத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது எனத் தெரிவித்தார். மேலும், சட்டமன்றத்தில் இருக்கைகள் கொடுப்பது தொடர்பாக அதிமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், அந்த கடிதம் பரிசீலனையில் உள்ளதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக ரீதியில் சட்டமன்றம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், சட்டமன்றத்தின் மாண்பையும் மரபையும், சிறிதளவும் குறைக்காமல் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.