இந்திய பாஸ்போர்ட்டுக்கு என்ன மதிப்பு தெரியுமா?

முன்கூட்டியே விசா பெறாமல் எத்தனை நாடுகளுக்குச் செல்ல முடியுமோ அதைப் பொறுத்து ஒவ்வொரு நாட்டின் பாஸ்போர்ட்டுக்கும் மதிப்பு வழங்கப்படும் நிலையில், இந்திய பாஸ்போர்ட்டுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ள மதிப்பு என்ன என்று தெரியுமா? வாருங்கள்…

முன்கூட்டியே விசா பெறாமல் எத்தனை நாடுகளுக்குச் செல்ல முடியுமோ அதைப் பொறுத்து ஒவ்வொரு நாட்டின் பாஸ்போர்ட்டுக்கும் மதிப்பு வழங்கப்படும் நிலையில், இந்திய பாஸ்போர்ட்டுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ள மதிப்பு என்ன என்று தெரியுமா?

வாருங்கள் பார்க்கலாம்.

ஒரு நாட்டின் குடிமகன், வேறொரு நாட்டுக்குச் செல்ல முன் அனுமதி பெறுவதற்கான ஆவணம் விசா.

விசா பெற்று பிறகு ஒரு குறிப்பிட்ட நாட்டுக்குச் செல்வது பொதுவான நடைமுறையாக இருந்தாலும், சில நாடுகளின் குடிமக்கள் தங்கள் நாட்டுக்கு வந்த பிறகும் விசா பெற்றுக்கொள்ளலாம் என்ற சலுகையும் வழக்கத்தில் உள்ளது.

இதை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு நாட்டின் பாஸ்போர்ட்டுக்கும் உள்ள மதிப்பு அளவிடப்படுகிறது.

சர்வதேச அளவில் மொத்தம் 199 நாடுகள் பாஸ்போர்ட்டை தங்கள் குடிமக்களுக்கு அளித்து வரும் நிலையில், அவற்றுக்கான மதிப்பை ஹென்லி பாஸ்போர்ட் என்ற அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், 2022ம் ஆண்டுக்கான பாஸ்போர்ட் மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜப்பான் பாஸ்போர்ட் முதலிடத்தில் உள்ளது. இந்த பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் உலகில் 193 நாடுகளுக்கு முன்கூட்டியே விசா பெறாமல் செல்லலாம்.

192 நாடுகளின் அனுமதியுடன் சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா 2ம் இடத்தில் உள்ளன. 190 நாடுகளின் அனுமதியைப் பெற்று ஜெர்மனியும் ஸ்பெயினும் 3ம் இடம் பிடித்துள்ளன.

இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் முன்கூட்டியே விசா பெறாமல் 60 நாடுகளுக்குச் செல்ல முடியும். பாஸ்போர்ட் மதிப்பீட்டு வரிசையில் இந்தியா 87வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த வரிசையில் மிகவும் பின்தங்கிய கடைசி 4 நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான், சிரியா, ஈராக், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.

பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் முன்கூட்டியே விசா பெறாமல் 32 நாடுகளுக்கு மட்டுமே செல்ல முடியும். சிரியா பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 30 நாடுகளுக்கும், ஈராக் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 29 நாடுகளுக்கும், ஆப்கனிஸ்தான் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 27 நாடுகளுக்கும் மட்டுமே செல்ல முடியும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.