29.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

இன்று விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3 விண்கலம்..!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய நிலவுக்கு அனுப்பப்படவிருக்கும் சந்திரயான் -3 விண்கலத்துக்கான கவுண்டவுன் நேற்று பகல் ஒரு மணிக்குத் தொடங்கிய நிலையில், திட்டமிட்டபடி இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடிக்கு சந்திரயான் -3 விண்கலத்தை சுமந்து கொண்டு ராக்கெட் விண்ணில் பாய்கிறது. விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. சந்திரயான் 3 விண்கலத்திற்கான அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்துள்ளன. எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ செய்து முடித்துள்ள நிலையில், இதற்கான 25.30 மணி நேர கவுண்டவுன் நேற்று பகல் ஒரு மணிக்குத் தொடங்கியது. ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான் – 2 விண்கலத் திட்டம் தோல்வியடைந்த நிலையில் அதில் பெறப்பட்ட பாடங்களைக் கொண்டு சுமார் 615 கோடி ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள சந்திரயான் – 3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேம்படுத்தப்பட்ட முறையில் தயாரித்துள்ளனர்.

விண்கலத்தை ஏந்திச்செல்லும் ராக்கெட்டில் திட, திரவ எரிபொருட்கள் நிரப்பப்பட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் நிலையில், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ரோவர் கருவி 100 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று ஆய்வு செய்யும் வகையில் சந்திரயான் – 3 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விண்ணில் செலுத்தப்படும் சந்திரயான் – 3 விண்கலம் வெற்றி பெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று காலை சாமி தரிசனம் செய்தனர். அப்போது சந்திரயான் -3 விண்கலத்தின் சிறிய மாதிரியை சாமி சன்னதியில் வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு செய்தனர். வழிபாடு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மேலும், நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 3-வது விண்கலமான ‘சந்திரயான் -3’, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading