வெளியானது சந்தானத்தின் ”டிடி – ரிட்டன்ஸ்” திரைப்படத்தின் ட்ரெயிலர்!

நடிகர் சந்தானம் நடித்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ (DD Returns) படத்தின் ட்ரெய்லர்  இன்று காலை 10.05 மணிக்கு இணையத்தில் வெளியானது. திகில்-காமெடி திரைக்கதையுடன் மீண்டும் சினிமாவில் கலக்க உள்ளதாக சந்தானம் சில மாதங்களுக்கு முன்பு…

நடிகர் சந்தானம் நடித்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ (DD Returns) படத்தின் ட்ரெய்லர்  இன்று காலை 10.05 மணிக்கு இணையத்தில் வெளியானது.

திகில்-காமெடி திரைக்கதையுடன் மீண்டும் சினிமாவில் கலக்க உள்ளதாக சந்தானம் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.  இதனைத் தொடர்ந்து சந்தானத்தின் ரசிகர்கள் புதிய படத்தின் அப்டேட் குறித்து  எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். 2016 மற்றும் 2019 இல் தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. தற்போது சந்தானம் நடித்து வரும் படித்திற்கு டிடி ரிட்டர்ன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்தாண்டு சந்தானம் நடிப்பில் ‘குலு குலு’, ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படங்கள் வெளியாகி பெரிய அளவில் வசூலாகவில்லை.  இதையடுத்து, ஆர்கே என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’.

பிரேம் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் சுரபி, காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர், ஃபெசி விஜயன், மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், தீனா, பிபின், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தீபக் குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைக்கிறார். அண்மையில் வெளியான டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் இன்று  (ஜூலை 14) காலை 10.05 மணிக்கு படத்தின் ட்ரெய்லர் வெளியானது. காமெடி ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இந்த மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது தவிர, ‘கிக்’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ உள்ளிட்ட பல படங்களில் சந்தானம் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.