நிலவின் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான் 3; நிலவை வீடியோ எடுத்த அனுப்பிய விண்கலம்!

நிலவை வீடியோ எடுத்த சந்திரயான் 3 விண்கலம், நிலவின் சுற்று வட்டப்பாதையில் அடுத்தகட்டத்தை எட்டி உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்-3’ விண்கலத்தை, கடந்த மாதம் 14-ந்தேதி இஸ்ரோ விண்ணில்…

நிலவை வீடியோ எடுத்த சந்திரயான் 3 விண்கலம், நிலவின் சுற்று வட்டப்பாதையில் அடுத்தகட்டத்தை எட்டி உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்-3’ விண்கலத்தை, கடந்த மாதம் 14-ந்தேதி இஸ்ரோ விண்ணில் ஏவியது. தொடர்ந்து, வெற்றிகரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்த, சந்திரயான்-3 விண்கலம் நேற்று முன்தினம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வரும் சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

https://twitter.com/chandrayaan_3/status/1688215948531015681?s=20

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 3 விண்கலம், அதிகபட்சம் 18 ஆயிரம் கிலோ மீட்டராகவும், குறைந்த பட்சம் 100 கிலோ மீட்டர் என்ற அளவிலும் நிலவு சுற்றுப்பாதையில் சுற்றிவர உள்ளது. இந்த நிலையில், நிலவுக்கு 170 கிலோமீட்டர் அருகிலும், 4 ஆயிரத்து 313 கிலோமீட்டர் தொலைவிலும் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை அடுத்தக்கட்டமாக ஆகஸ்ட் 9ம் தேதி குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.