ஆசிய கோப்பை ஹாக்கி : மலேசியாவை வீழ்த்தியது இந்தியா!

ஆசிய கோப்பை ஹாக்கி மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 5 1 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.  ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடர் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று…

ஆசிய கோப்பை ஹாக்கி மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 5 1 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடர் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஜப்பான், மலேசியா, கொரியா, சீனா மற்றும் பாகிஸ்தான் என 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.
நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா, மலேசியா  அணிகள் மோதின.  இந்திய வீரர்கள்  ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.  15வது  நிமிடத்தில்  கார்த்திக் செல்வம் முதல் கோல் அடித்தார்.  பின்னர் 32, 42, 53 மற்றும் 54வது நிமிடங்களில் இந்திய அணி அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது.
ஆனால்  மலேசியா அணி வீரர்கள் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.  இதனையடுத்து, 5-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி வெற்றி பெற்றது. 3  ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்தியா. இரு ஆட்டங்களில் வெற்றியும், ஒரு போட்டியில் டிரா செய்து 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.