கருணாநிதி நினைவுதின அனுசரிப்பு; இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி…

கருணாநிதி நினைவுதினத்தையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று அமைதிப் பேரணி நடைபெறுகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…

கருணாநிதி நினைவுதினத்தையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று அமைதிப் பேரணி நடைபெறுகிறது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 8 மணியளவில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.

சென்னை அண்ணாசாலையில், ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலை அருகே புறப்படும் பேரணி, வாலாஜா சாலை, காமராஜர் சாலை வழியாக கருணாநிதி நினைவிடத்தை சென்றடையும். பின்னர், கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். இப்பேரணியில், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.

தனது தந்தையும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நினைவுதினத்தையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தனது கைப்பட புகழஞ்சலி எழுதியுள்ளார். அதில், உங்களுக்காக ஒரு நல்ல செய்தி கொண்டு வருகிறேன் என்றும், நீங்கள் இருந்து செய்ய வேண்டியதைத் தான், அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாநிலங்களுக்கும் உரிமையை பெற்றுத்தரும் கட்சியாக திமுக இருக்க வேண்டும் என்ற உங்களது அந்தக் கனவு நிறைவேறப் போகும்
காலம், வரும்காலம் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.