”சந்திரமுகி 2” படத்தில் கையில் வாளுடன் பின்புறம் திரும்பி நிற்கும் வேட்டையன் மகாராஜாவின் புகைப்படத்தினை வெளியிட்டு, வேட்டையன் கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படம் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறுஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், 13 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன், சிஷ்டி டாங்கே, ரவிமரியா என நட்சத்திர பட்டாளமே நடித்து வந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.
லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். முதல் பாகத்தின் தொடர்பு இல்லாமல் உருவாகி வரும் இத்திரைப்படம் தெலுங்கில் வெளியான “நாகவள்ளி” திரைப்படத்தின் தழுவலாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
படப்பிடிப்பு நிறைவடைந்ததாக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்தனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணியை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதற்கான அறிவிப்பை லைகா நிறுவனம் முன்னதாக தெரிவித்திருந்தது. தற்போது நடிகர் வடிவேலு, நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகிய இருவரும் டப்பிங் பணியை முடித்துவிட்டதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், கையில் வாளுடன் பின்புறம் திரும்பி நிற்கும் வேட்டையன் மகாராஜாவின் புகைப்படம் வெளியிட்டு வேட்டையன் கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படம் நாளை காலை 10 மணிக்கு வெளியாகுமென நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Rajadhi raja, Raja ghambira, Raja marthanda, Raja kula thilagaa… Vettaiyan Raja paraak paraak paraak!! 🕴️🗝️
Watch this space at 10AM tomorrow as we unveil the look of our #Vettaiyan 👑
Chandramukhi-2 releasing in Tamil, Hindi, Telugu, Malayalam & Kannada this Ganesh… pic.twitter.com/TAf8HhZFDQ
— Raghava Lawrence (@offl_Lawrence) July 30, 2023
- பி.ஜேம்ஸ் லிசா