சந்திரமுகி 2 படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ஆசி பெற்றார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்திரமுகி படம் சென்னையில் உள்ள சாந்தி திரையரங்கில் மட்டும் 800 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதே போல வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சந்திரமுகி 2 ஆம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
.
சந்திரமுகி 2 திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன் தயரிப்பதாகவும் P.வாசு இப்படத்தை இயக்குவதாகவும் அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு இன்று மைசூரில் துவக்கியது. இதையொட்டி தனது குருவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து நடிகர் ராகவா லாரன்ஸ் ஆசி பெற்றார்.
சந்திரமுகி 2 படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். முதல் பாகத்தைப்போல, இந்த படத்திலும் நடிகர் வடிவேலு நடிக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, தோட்டா தரணி கலை இயக்குனராக பணியாற்றுகிறார். மற்ற நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் வெளியாக உள்ளது. சந்திரமுகி 2 படத்தின் இந்த புதிய அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
– தினேஷ் உதய்