மகாராஷ்டிரா பாஜக தலைவர் பாட்டீல், நரேந்திர மோடி தான் ஏபிஜே அப்துல் கலாமை இந்தியாவின் ஜனாதிபதியாக ஆக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிரா புனேவில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கட்சி விழாவில் அம்மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஜூலை 2002-ஆல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கலாம் ஜனாதிபதி நியமிக்கப்பட்டார். அப்போது மோடி குஜராத் முதல்வராக இருந்தார். அவர்தான் அப்துல்கலாம் ஜனாதிபதியாக வரவேண்டும் என மத்தியில் ஆண்ட பாஜக அரசிடம் வலியுறுத்தினர். அதன் காரணமாகவே பாஜக தலைமை கலாமை ஜனாதிபதியாக நியமித்தது என தெரிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைத்தொடர்ந்து இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மகாராஷ்டிரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அதுல் லாந்தி “கலாம் போன்ற ஒரு உண்மையான தேசபக்தரின் புகழுக்கு அவதூறு செய்து பாட்டீல் பாவம் செய்யக்கூடாது. அவரது கருத்துக்கள் கேலிக்குரியவை” என்று கூறினார். இதேபோல் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர், “பிரதமர் வாஜ்பாய் கலாமை ஜனாதிபதியாக நியமித்தபோது அனைத்து கட்சிகளும் அவருக்கு ஆதரவு அளித்தோம். 2020 ஆம் ஆண்டு அளவில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற கனவை கலாம் நமக்கு உணர்த்தி இருந்தார். ஆனால் அந்த கனவை மோடி சிதைத்துவிட்டர் என தெரிவித்தார்.