“#TirupatiLaddu விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கீழ்த்தரமான அரசியல் செய்கிறார்; சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்” – நடிகை ரோஜா!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு மிகவும் கீழ்த்தரமான அரசியலை செய்கிறார் என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை…

“Chandrababu Naidu is doing base politics on Lattu issue; CBI should investigate” - Actress Roja!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு மிகவும் கீழ்த்தரமான அரசியலை செய்கிறார் என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்
சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரோஜா பேசியதாவது;

உண்மையில் மிக கஷ்டமாக இருக்கிறது. திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார். சந்திரபாபு நாயுடு தனது சுய நலத்துக்காக எதையும் செய்வார். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் ஒரு திட்டமும் செய்யவில்லை. தனது தவறை மறைக்கும் விதமாக, லட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். மார்ச் உடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலம் முடிந்துள்ளது. ஜூலை மாதத்தில் திருப்பதி கோயிலுக்கு நெய் வந்தது. அதில் 4 லாரி நெய் அனுமதிக்கப்பட்டது.

4 லாரி நெய் வனஸ்பதி கலந்ததால் நிராகரிக்கப்பட்டது. திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெகன் மோகன் ரெட்டியை அரசியல் ரீதியாக பூஜ்யமாக்கவே சந்திரபாபு நாயுடு இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவுக்கு பக்தியும் இல்லை. கடவுள் மீது நம்பிக்கை இல்லை. கடவுளை தனது சுய நலத்துக்காக பயன்படுத்துகிறார். சந்திரபாபு நாயுடு கட்சி அலுவலகத்தில் இருந்து பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டது.

லட்டு விவாகரத்தில் நடவடிக்கை எடுக்காமல், நாடகம் செய்து வருகிறார். மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறார். மத்தியில் கூட்டணியிலும், மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு நடத்தும் எந்தவொரு விசாரணையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். திருப்பதி தேவஸ்தான லட்டுவில் எந்தவொரு கலப்படமும் செய்யப்படவில்லை. சந்திரபாபு நாயுடு அரசியலுக்காக கடவுளை ரோட்டுக்கு கொண்டு வந்துள்ளார். லட்டுவில் கலப்படம்
கலந்து உள்ளதா? இல்லையா? என மக்கள் குழப்பத்தில் உள்ளனர். லட்டு விவகாரத்தில்
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு மிக கீழ்த்தரமான அரசியல் செய்கிறார். சந்திரபாபு நாயுடுவுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என அனைத்து கோயில்களிலும் வேண்டிக் கொள்கிறேன். முடிந்தால் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். இல்லையெனில் ராஜினாமா செய்து விட்டு வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும். சனாதனத்தின்படி பேசும் பவன் கல்யாண், அவர் வீட்டில் சனாதனத்தை கடைப்பிடிப்பதில்லை. பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடு எழுதி கொடுத்ததை பேசி வருகிறார்” எனக் கூறினார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.