அடுத்த 3 மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: வடகிழக்குப் பருவமழை…

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை,  செங்கல்பட்டு, திருவள்ளூர்,  காஞ்சிபுரம்,  விழுப்புரம், கடலூர்,  மயிலாடுதுறை, கரூர்,  ராணிப்பேட்டை, வேலூர்,  திருப்பத்தூர்,  கிருஷ்ணகிரி,  தருமபுரி,  ஈரோடு,  சேலம்,  நாமக்கல்,  பெரம்பலூர், அரியலூர்,  திருவண்ணாமலை,  தஞ்சாவூர்,  திருவாரூர்,  நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 23 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.