அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  வானிலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் நேற்று அதிகாலை கரையை கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு…

அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  வானிலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் நேற்று அதிகாலை கரையை கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் நேற்று அதிகாலை கரையை கடந்த இந்நிலையுள்ளும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.