தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டைம், சிவகங்கை, தஞ்சவூர், தேனி, நீலகிரி, திருவாரூர், திருச்சி, திருப்புர் மற்றும் வேலூர் ஆகிய 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




