முக்கியச் செய்திகள் தமிழகம்

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது?

கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளைத் திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வரும் பொதுத்தேர்வு மே இறுதியில் முடிவடைகிறது.

இதனிடையே, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், மாநிலத்தில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்டவை ஜூன் இரண்டாம் வாரம் வரை நடைபெறுவதன் காரணமாக, பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில், ஜூன் 4-ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட உள்ளது. பள்ளிகள் திறப்பு தாமதமாவதன் காரணமாக ஏற்படும் கற்றல் இழப்பை சரிசெய்யும் வகையில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மெட்ரிக் பள்ளிகளில் 69% இட ஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை வெளியிட பாமக வலியுறுத்தல்

Web Editor

மதுபோதையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை

Saravana Kumar

இருவேறு நாடுகளில் மாட்டிக்கொண்ட கேரள தம்பதி

Saravana Kumar