முக்கியச் செய்திகள் தமிழகம்

செயின் பறிப்பு; 3வது கொள்ளையனை தேடும் பணி தீவிரம்

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி பகுதியில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் மூன்றாவது நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காஞ்சி மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பூதேரி பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவர் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பணிக்குச் சென்றபோது அடையாளம் தெரியாத வடமாநில இளைஞர்கள் இரண்டு பேர், இவரிடம் வழி கேட்பது போல் பேச்சுக் கொடுத்து அவரிடம் இருந்த 6 சவரன் நகையைப் பறித்துக் கொண்டு தப்ப முயன்றுள்ளனர். அப்போது இந்திராணி கூச்சலிடவே அவரது அலறல் சத்தம் கேட்ட அங்கிருந்த பொதுமக்கள் கொள்ளையர்களை துரத்தினர். அப்போது, கொள்ளையர்களில் ஒருவர் தன்னிடம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி மக்களை மிரட்டி, பொதுமக்களிடம் இருந்து தப்பித்து பென்னலூர் ஏரிப் பகுதியில் மறைந்தனர்.

இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். இன்று காலை அவர்கள் அனைவரும் 10 குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் கொள்ளையர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 5 ட்ரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில், மேவலுற்குப்பம் அருகே அவர்கள் இருவரும் பதுங்கி இருப்பதாக, காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் அந்த பகுதிக்கு விரைந்தனர். போலீசாரைக் கண்டதும் கொள்ளையர்களில் ஒருவன் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினான். இதையடுத்து போலீசார் பதில் தாக்குதல் நடத்த துவங்கினர். இதில் கொள்ளையனின் ஒருவன் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

மற்றொரு நபரான நைம் அக்தரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது மூவர் என்றும், அதில் மூன்றாவது நபரை தீவிரமாக தேடி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கொள்ளையர்கள் பணி செய்த இடம், தங்கியிருந்த இடம், நண்பர்கள் என அனைவரிடமும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அனைத்து வடமாநிலத்தவர்களிடம் விசாரணையும் அவர்கள் குறித்த தகவலை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட ஒருவரை என்கவுண்ட்டர் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

திடீர் மாரடைப்பு: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மரணம்

Halley karthi

அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Saravana

அதிமுக தேர்தல் அறிக்கையைப் பார்த்து திமுக பயப்படுகிறது: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

Halley karthi