முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாஞ்சாகுளம் பள்ளியில் சாதி பாகுபாடு இல்லை – நேரில் ஆய்வு செய்த கல்வி அதிகாரி விளக்கம்

சாதி பாகுபாடு பார்க்கப்பட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டப்பட்ட பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் ஆதிதிராவிட நலத்திறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகேயுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் திண்பண்டங்கள் வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளனர். ஆனால் கடைக்காரர் ஊரில் கட்டுப்பாடு போடப்பட்டுள்ளதால் திண்பண்டங்கள் வழங்க முடியாது எனக் கூறியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இச்சம்பவம் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியடுத்து, இந்த விவகாரத்தில் இதுவரை 2பேர் கைது செய்யப்பட்டு, 5பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாஞ்சாகுளத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம் செய்யப்பட்டதோடு, இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் சாதி பாகுபாடு பார்க்கப்பட்டதாக சொல்லப்பட்ட பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இன்று திறக்கப்பட்டது. இப்பள்ளியில் 23 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் கூறியதைப் போன்று எந்த வித சாதிய பாகுபாடும் பார்க்கவில்லை எனவும், பள்ளியின் ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களையும் சமமாகவே நடத்தி வருகின்றனர் எனவும், பள்ளியை ஆய்வு செய்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சிக்கு  பேட்டியளித்த தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர் பேசியதாவது: பள்ளியில் எந்த சாதிய பாகுபாடும் இல்லை, ஆசிரியர்கள் மாணவர்களைச் சமமாகவே நடத்துகின்றனர். பள்ளியில் மாணவர்கள் உட்காருவதற்கு பெஞ்ச் எதுவும் போடப்படவில்லை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய அவர், இந்த விசாரணை தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறினார்.

 

-பரசுராமன்.ப 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் இன்று தொடக்கம்

Gayathri Venkatesan

இன்ஸ்டாகிராமில் சிஎஸ்கே போஸ்டுகளை நீக்கிய ஜடேஜா.. அணிக்கு குட் பை சொல்கிறாரா?

Web Editor

நடிகர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்: நடிகை ஓவியா

எல்.ரேணுகாதேவி