கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தவும் இந்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 85 சதவீத எத்தனால் மற்றும் 15 சதவீத பெட்ரோல் கொண்ட E85 எரிபொருள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
E85 எரிபொருளைப் பயன்படுத்துவது கட்டாயமல்ல. மக்கள் தங்களுக்கு விருப்பமான எரிபொருள் வகையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் இந்த எரிபொருளைப் பயன்படுத்தக்கூடிய பிரத்யேக வாகனங்களைத் தயாரிக்க வாகன உற்பத்தியாளர்கள் தயாராக உள்ளனர் என்றும் மத்திய அரச தரப்பில் தகவல்கள் கூறப்படுகிறது.
எத்தனால் உற்பத்தியால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியா முழுவதும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்தகட்டமாக E22, E25 மற்றும் E26 ஆகிய ரகங்களுக்கான தர நிலைகளும் விரைவில் வெளியிடப்பட உள்ளன என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.







